நம் பாரதத்தை பொறுத்தவரை எந்தெந்த சமூகத்தினருக்கெல்லாம் குரு நாதர் உள்ளாரோ, குரு பீடம் உள்ளதோ அந்த சமூகத்தினர் கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதைக் காணலாம்.
சில சமூகத்தினருக்கு குருவோ, குரு பீடமோ இல்லை. அவர்கள் கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ளனர்.
ஒரு தனி மனிதனின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழி காட்டுபவர் குரு நாதரே.
• குருவின் தீண்டல் (தீட்சை) அனைவருக்கும் அவசியம்
• குரு வணக்கம் செய்ய சிறந்த நாள் ஆடி பௌர்ணமி (குரு பூர்ணிமா)!
கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகளாவர். இந்த எழுவரும் சிவனிடமிருந்து சில யோக பயிற்சிகளை கற்றனர். அந்த பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து எண்பத்தி நான்கு ஆண்டுகள் செய்து வந்தனர். இருப்பினும் சிவபெருமான் அவர்களை பார்க்கவும் இல்லை அவர்களிடம் பேசவும் இல்லை. எனினும் ரிஷிகள் தங்கள் பயிற்சிகளை தொடர்ந்தனர். அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவபெருமான் மனமிறங்கி அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்க ஆயுத்தமானார்.
தக்ஷினாயன்ய காலம் என்பது சூரியன் தெற்கு நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும் காலம். எதையும் உள்வாங்கிக்கிக் கொள்ள சிறந்த காலம். அதற்கு ஏற்றார் போல் சிவபெருமான் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று தெற்கு நோக்கி அமர்ந்து சப்த ரிஷிகளுக்கு ஒரு குருவாக போதனைகளை வழங்கிய காலம். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி “குரு பௌர்ணமி” என்றும் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் “தக்ஷிணாமூர்த்தி” என்றும் அழைக்கப்படலானார்.
வியாச பௌர்ணமி:
வேதங்களை சாமானியர்களால் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ள அதன் அர்த்தங்களை விளக்கமாக எடுத்துச் சொல்பவரை “வியாசர்” என்று கூறுவார். அதனால் வடநாட்டில் ஆடி மாதப் பௌர்ணமியை குரு பூர்ணிமா - வியாச பௌர்ணமி என்று கொண்டாடுவது வழக்கம்.
ஆடி மாதப் பௌர்ணமியை “ஆஷாட சுத்த பௌர்ணமி’ என்று கூறுவதும் உண்டு. இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொண்டு , வியாச பூஜை செய்வார்கள் என்றும் கூறுவர். இந்நாளில் மாந்தர்கள் அனைவரும் மனதளவில் தங்களுடைய ஆஸ்தான அபிமான குருவாக ஏற்றுக் கொண்டவருக்கு பூஜைகள் செய்தால் அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட வித்தைகளை முழுமையாக உள்வாங்கும் ப்ராப்ததை பெறுவது உறுதி.