29. கண்ணனை தாக்கிய அம்பு

 


“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 

என்ன பயத்ததோ சால்பு”


என்றார் திருவள்ளுவர்
இது கண்ணன் கூறிய “துல்ய ப்ரிய அப்ரியோ தீர” (இனியவரிடத்தம் இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்கும் தீரன்) என்ற குரலின் எதிரொலியே எனலாம்
இன்னா செய்தார்க்கும் இனிய செய்க என்று சொல்வது யார்க்கும் எளிய ஆனால் சொல்லியவண்ணம் செயதல அரியதெனபது தமிழ்மறை
கண்ண பெருமான் முழுஞானி அவனிடம் சொல்லுககும் செயலுக்கும் வேறுபாடு காண இயலுமா!
இக்கருத்துக்கு எடுத்துக் காட்டாகக் கண்ண பெருமானின் இறுதி வரலாறு திகழ்கின்றது
தன் அவதாரச் செயல்கள் முழுவதும் முடிந்தபின்பு, அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தனையில் ஆழ்ந்தான் கண்ணன் ஓர் அரச மரத்தின் நிழலில், ஒரு காலை மேலே மடித்து வைத்துக் கொண்டு தனிமையில் அறிதுயில கொண்டிருந்தான்
அவன் திருவடியின் உள்ளங்கால் செவ்வண்ணம் கண்ட ஒரு வேடன், ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பாக எண்ணி விட்டான் 
அன்று அவன் வேட்டைக்குப் புறப்பட்டதிலிருந்து எந்தப் பிராணியும் தென்படவில்லை எதிர்பாராமல் தென்பட்ட இந்தப் பிராணியை விட்டுவிடலாகாது என்று கருதினான் உடனே கண்ணபிரானது திருவடித்தலத்தில தன் அம்பைக் குறி வைத்து எய்துவிட்டான் அந்த அம்பு, தவறாமல் கண்ணனது உள்ளங்காலில் தைத்தது இரத்தம் பீறிட்டது 
தான் எய்தது விலங்கை அல்ல, கண்ணபிரானையே என உணர்ந்த வேடன் நடுங்கினான்
“ஐயோ! எத்தகைய பாவம் செய்துவிட்டேன் உலகம் காக்க அவதாரம் செய்த அச்சுதனை அல்லவா எய்துவிட்டேன் இனி நான் உயிரோடிருத்தல் தகாது” என்று தன் அம்பாலேயே தன் வயிற்றைக் கீறிக் கொள்ள முனைந்தான்
இறைவன், நில்லு வேடப்ப! நில்லு வேடப்ப! என்று அபயம் கொடுத்து, அருகில் அழைத்து, நீ தெரிந்து இத்தவறு செய்யவில்லை அதுமட்டுமல்ல எனக்கு நன்மையே செய்துள்ளாய் என் அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்
அடுத்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளுவதே பரமபதம் மீளுவதே செய்ய வேண்டுவது என்பதனை நீ உன் செயலால் உணர்த்தி விட்டாய்! நீ பாபம் என்று எண்ணுவது, எனக்கு லாபமாக முடிந்தது என்று ஆறுதல் கூறினான்
பின்னர், அந்தரத்திலிருந்து வந்த தெய்வ விமானத்தில் அவ்வேடனை தூலஉடலுடனே ஏற்றிப் பரமபதத்துக்கு அனுப்பினான் 

 

Comments
हमारे टेलिग्राम ग्रुप से जुड़े। यहाँ आप अन्य रचनाकरों से मिल सकते है। telegram channel

Books related to ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்